கனமழையால் சாலையின் குறுக்கே விழுந்த மரம்

ஆற்றூர் அருகே சூறைக்காற்றில் சாலையின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன.

Update: 2024-05-23 12:29 GMT

கனமழை

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்தை அருகே தர்மசாஸ்தா கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே சாலையோரம் பழமை வாய்ந்த ராட்சத அயனிமரம் உள்ளது. அங்கு அருவிக்கரை இடதுகரை கால்வாய் செல்வதால் எப்போதும் இந்த பகுதியில் தண்ணீர் வளம் அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததால் மண்ணரிப்பு ஏற்பட்டு அயனி மரத்தின் வேர்ப்பகுதி ஆட்டம் கண் டது. நேற்றும் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்று காலை மணியளவில் மரம் திடீரென வேரோடு சாய்ந்து சாலை யின் குறுக்கே விழுந்தது.விழுந்த வேகத்தில் அங்கிருந்த 2 மின்கம்பங்களையும் உடைத்துவிட்டது. மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால் அந்த வழி யாக செல்லும் வாகனங் கள் செல்ல முடியாததால் நீண்டவரிசையில் நின்றது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனைதொடர்ந்து போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News