அருப்புக்கோட்டை பகுதிகளில் கனமழை
அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் மாலை வேளையில் குளிர்ந்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை பெய்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. அருப்புக்கோட்டையில் கடந்த இரு தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை அதே போல கரு மேகங்கள் சூழ்ந்த நிலையில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.
மாலை வேளையில் குளிர்ந்த காற்றுடன் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம், ராமானுஜபுரம், மேல கண்டமங்கலம், திருச்சுழி, ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குளிர்ந்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் தற்போது பெய்த உள்ள மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.