கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கன மழை

கொடைக்கானலில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-04-13 05:26 GMT

கொடைக்கானலில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் வேளையில் சுமார் அரை மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது, குறிப்பாக பேருந்து நிலையம்,7ரோடு சந்திப்பு, மூஞ்சிக்கல், உகார்த்தேநகர், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது, கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது, மேலும் மலைப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்,மேலும் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News