நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 3 மணி முதல் கொட்டி தீர்க்கும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Update: 2024-06-23 12:18 GMT
தர்மபுரி மாவட்டம் ,மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைப்பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் நல்லம்பள்ளி, குடுப்பட்டி, நாகர்குடல், ஜருகு, சேசம்பட்டி, தொப்பூர், வெள்ளக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. திடீரென பொழிந்து கனமழையால் மழை நீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.