சூறைக்காற்றுடன் கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்.

பேச்சிப்பாறை,தோட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது.

Update: 2024-04-22 03:00 GMT

காரின் மேல் சாய்ந்த மரம்

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வர, நேற்று மதியத்திற்கு பின் எதிர்பாராத விதமாக மலையோர பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதில் பேச்சிப்பாறை, கோதையார், தச்சமலை, தோட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. ரப்பர் மரங்களும், காட்டு மரங்களும் சாய்ந்ததில் பல பகுதிகளில் மின் கம்பங்களும் சேதமானது. இதனால் மின் விநியோகம் தடைபட்டது.

பேச்சிப்பாறை சமத்துவபுரம் எதிர் புறத்திலுள்ள துணை மின் நிலைய வளாகத்தில் நின்ற முதிர்ந்த பலா மரம் ஒன்று வேருடன் சாய்ந்து, ரோடின் குறுக்கே வீழ்ந்தது. இதில் ரோட்டில் பயணித்த காரின் மேற் பகுதியில் மரம் வீழ்ந்தது. மரம் வீழ்ந்த போது முறிந்த பெரிய கிளை ஒன்று காரின் முன்பக்க கண்ணாடி உடைத்து காருக்குள் சென்றது. ஆனால் காரின் உள்ள பகுதியில் இருந்த எவருக்கும் காயம் ஏற்பட வில்லை. காரின் மேற் பகுதியில் மரம் வீழ்ந்தும், மரக்கிளை காரின் உள் பகுதியில் துளைத்து சென்றும், காரின் உள்பகுதியில் இருந்த நபர்கள் அதிரஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags:    

Similar News