ராசிபுரத்தில் கனமழை

ராசிபுரத்தில் கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-06-23 05:06 GMT

மழை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திடீரென பலத்த காற்று வீசி கனமழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு வழிச்சாலை செல்லும் வழியில் இந்த கனமழையால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஒருவழிச்சாலை நகராட்சி கழிப்பிடம் அருகே சாக்கடை நீர் அதிகளவில் தேங்கி அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் துர்நாற்றம் ஏற்படுத்தியதுடன் அவர்கள் வெளியில் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டது.

தொடர்ந்து மழைக்காலங்களில் இது போன்ற நிகழ்வு நடைபெற்று வருவதால் இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Tags:    

Similar News