கொடைக்கானலில் வெளுத்து வாங்கும் மழை

கொடைக்கானலில் கனமழை பெய்து வரும் நிலையில், மழையில் நாணிந்தபடியே சுற்றுலா ,குடைகளை பிடித்தபடியும் பூக்களை ரசித்து உற்சாகமடைந்தனர்.

Update: 2024-05-21 16:46 GMT

கொடைக்கானல

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் பிற்பகல் வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சிறிது நேரம் சாரல் மழை பெய்தது, தொடர்ந்து மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகின்றது, குறிப்பாக அப்சர் வேட்டரி, ஏரிச்சாலை, அண்ணா சாலை, அண்ணா நகர், ஆனந்தகிரி,பாம்பார் புரம், செயின்ட் மேரிஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாகவும் வேறு ஒரு சில பகுதிகளில் சாரல் மழையாகவும் பெய்து வருகின்றது.

மேலும் 5 வது நாள் மலர் கண்காட்சியை காண பிரையன்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தும், குடைகளை பிடித்தபடி பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர், மேலும் மழை தொடர்வதால் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளதுடன், முக்கிய குடி நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News