கரூரில் லேசான காற்றுடன் கனமழை
கரூரில் லேசான காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
Update: 2024-06-05 10:50 GMT
கரூரில் லேசான காற்றுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூரில் லேசான காற்றுடன் கனமழை. பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அண்மையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே லேசான முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் கரூரில், இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில், திடீரென கார் மேகங்கள் கரூரை சூழ்ந்தது. சிறிது நேரத்திலேயே அது கனமழையாக லேசான காற்றுடன் பெய்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.