மதுரை மாநகரில் கொட்டி தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாநகரில் 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினமும் மாலை வேலைகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதீத கன மழை பெய்து வருவதால் மதுரை மாநகர் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளான தல்லாகுளம், தமுக்கம் மைதானம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையம், சிம்மக்கல் பெரியார் பேருந்து நிலையம், திடீர்நகர், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம்,மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவு மழைநீர் சேர்ந்து உள்ளது. இன்று மாலை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து,
நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக மாலை வேலைகளில் 2 மணி நேரத்திற்கு அதிகமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை விரிவாக்க பணிகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களிலும் தண்ணீர் பாதாள சாக்கடைக்கு செல்ல,
முடியாமல் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சியளித்து வாகன ஓட்டிகள் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.