மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கனமழையும், உள் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.;
Update: 2024-01-07 03:54 GMT
மழை
மயிலாடுதுறை மாவட்டக் கடற்கரையோர பகுதிகளில் கனமான மழையும் மாவட்டத்தின் உள் பகுதிகளில் பகுதிகளில் விடிய விடிய மிதமான மழையும் மற்ற பகுதிகளில் தொடர் சாரல் மழையும் பெய்தது. காலை 6 மணிவரை பெய்த மழையளவு . மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளான தரங்கம்பாடி 53 மி.மீ சீர்காழி 62,4 மி.மீ. கொள்ளிடம் 33மி.மீ மாவட்டத்தின் உள் பகுதிகளான செம்பனார்கோவில் 38.6 மி.மீ.,மணல்மேடு 4. மி.மீ., மயிலாடுதுறை 26.7 மி.மீ., ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 36.3 மி.மீ., பெய்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டமாக உள்ளது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்துவருகிறது.