பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் : எஸ்பி அறிவுறுத்தல்!

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-13 05:04 GMT

எஸ்பி 

தூத்துக்குடியில், போக்குவரத்து காவல்துறை மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று (12.06.2024) தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பேசுகையில், சாலை பாதுகாப்பு நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சாலை விபத்துகளில் காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகமாக நிகழ்கிறது. இதை தடுப்பதற்காகவே அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் நோக்கமே இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அனைவரும் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதாகும். தலைகவசம் விபத்தின்போது நம்மை காப்பது மட்டுமில்லாமல் நமது குடும்பத்தையும் சேர்த்து காப்பாற்றுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைகவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த சில இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசங்களையும், தலைகவசங்கள் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி இனிப்புகளும் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News