உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி!
புதுக்கோட்டை லெணாவிலக்கிலுள்ள மௌண்ட் சீயோன் செவிலியர் கல்லூரி சார்பில் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை லெணாவிலக்கிலுள்ள மௌண்ட் சீயோன் செவிலியர் கல்லூரி சார்பில் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்திலிருந்து திருமயம் பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, கல்லூரியின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
திருமயம் ஊராட்சித் தலைவர் சிக்கந்தர், கல்லூரி முதல்வர் ஜாஸ்மின் ஷீலா, துணைஜாஸ்மின் ஷீலா, துணை முதல்வர் ஜெரின்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற உயர் ரத்த அழுத்த மருத்துவப் பரிசோதனை முகாமில் 628 பேருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 133 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், அவர்களில் 47 பேர் புதியவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.