தர்மபுரியில் மீண்டும் உயர்ந்த வெப்பநிலை

தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 95 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர்.

Update: 2024-05-30 10:58 GMT

தருமபுரியில் கொளுத்தும் வெயில் 

தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பொழிந்த கன மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு வெப்பநிலை இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி இன்று தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 95 டிகிரி வரை வெப்பம் நிலவியது. தமிழ் மாதத்தில் கத்திரி என அழைக்கப்படும் கோடை காலம் முடிவடைந்து நிலையில் குளிர்ந்த சீதோசன நிலை இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags:    

Similar News