அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உயர் கோபுரம் மின் விளக்கு - பணிகள் துவக்கம்

Update: 2023-11-02 03:39 GMT

அண்ணா விளையாட்டு அரங்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த விளையாட்டு அரங்கங்களில் அண்ணா விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விளையாட்டு அரங்கத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 8 கேலரிகள் உள்ளன. மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, கபடி போட்டி மற்றும் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ராணுவத்தில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்கள், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகி றார்கள். இந்த மைதானத்தை சீரமைக்க ஏற்கனவே விளையாட்டு துறை சார்பில் ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கேலரிகள் பராமரிக் கப்பட்டது. மேலும் இங்குள்ள அறைகள் உட்பட அனைத்தையும் பராமரிக்க ரூ.1கோடியே 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த மைதானத்தில் போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது 4 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டரங்கத்தில் நான்கு புறங்களிலும் இந்த உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மின் விளக்குகள் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் ஏற்கனவே வெளியிடங்களில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கொண்டு இறக்கி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். ஒரு வார காலத்திற்குள் இந்த பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் போது

 இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமையும். மாநில அளவிலான மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் போது இது பயனுள்ளதாக இருக்கும் என்று விளையாட்டு வீரர்கள் கருதுகிறார்கள்.

Tags:    

Similar News