அழகப்பபுரத்தில் உயர் கோபுர சோலார் மின்விளக்கு

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்புரத்தில் உயர் கோபுர சோலார் மின்விளக்கை எம்பி திறந்து வைத்தார்.;

Update: 2024-03-08 08:45 GMT
உயர் கோபுர சோலார் மின்விளக்கு திறந்த எம்.பி

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. 7.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோலார் விளக்குகள் 10 ஆண்டு வாரண்டியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.         

இந்நிலையில், அழகப்பபுரம் பேரூராட்சி, ஆரோக்கியபுரம் பேரூராட்சி மற்றும் லீபுரம் பேரூராட்சியில் அமைத்த விளக்குகளை மக்கள் தேவைக்காக காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் நேற்று  தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேருராட்சி தலைவர் அனிட்டா ஆண்ட்ரூஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் கால பெருமாள் உட்பட மக்கள் பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News