சங்கரன்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் தடம் அறக்கட்டளை சாா்பில் நடந்த உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-27 02:58 GMT

மாணவிக்கு விருது 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தடம் அறக்கட்டளை சாா்பில் உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தடம் அறக்கட்டளைத் தலைமை செயல் அதிகாரி வழக்குரைஞா்.ஜா. பிரிசில்லாபாண்டியன் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் இயக்குநா் மருத்துவா் வியங்கோ பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

ஹெச்.சி.எல். இணைப்பு பொது மேலாளா் லோகேஷ், பேராசிரியா் குளத்தூரான், பண்பாட்டுக் கல்லூரி முனைவா் கண்ணன், ரணின், ரவி கிருஷ்ணன், முனைவா் சுந்தரம், சிவன்மாரி, கிருஷ்ணகுமாா், அப்துல்கபூா் ஆகியோா் பங்கேற்று உயா்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல்களை விளக்கிக் கூறினா். தொடா்ந்து தென்காசி மாவட்டத்தில் பள்ளி இறுதித் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கற்பகராஜ், சுப்பிரமணியன், மோகன், காசிராஜன், செல்விமகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News