புனித அமல அன்னை ஆலய தேர் திருவிழா

பந்தல்குடி புனித அமல அன்னை ஆலயத்தில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-26 09:09 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் 50 ஆண்டுகள் பழமையான புனித அமல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் அமலோற்பவ அன்னையின் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அமல அன்னையின் திருவுருவ சிலை, தேரில் வீதி தோறும் பவானியாக வந்தது இந்த தேர் பவனியில் பந்தல்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் அருள் ஆசி பெற்று சென்றனர்.
Tags:    

Similar News