காந்தி மண்டபத்தில் ஆட்சியர் மரியாதை 

மகாத்மா காந்தியடிகளின் 77வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2024-01-31 09:49 GMT
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி படத்துக்கு கலெக்டர் மாலை அணிவித்தார்.

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில்  ஆண்டுதோறும் ஜனவரி -30 அன்று அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினமானது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்று கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், நடந்த இந்த நிகழ்ச்சியில்  காந்தி நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Advertisement

தொடர்ந்து காந்தி நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த கைராட்டு கதர் நூற்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட்,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சதிஷ்குமார், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News