HORN BILL " பறவையை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பார்த்து ரசித்தனர்.
கண்டு ரசித்து மகிழ்வு;
நீலகிரி மாவட்டம் தேவாலா கரிய சோலைப் பகுதியில் தென்பட்ட " HORN BILL " பறவையை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பார்த்து ரசித்தனர். உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ள நீலகிரியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன குறிப்பாக வெளிநாட்டு பறவை இனங்களும் அதிகமாக காணப்படுகின்றன . குறிப்பாக கேரள மாநிலத்தின் மாநில பறவை " HORN BILL " நீலகிரி மாவட்டத்தில் பர்லியாறு, கீழ் கோத்தகிரி,கூடலூர்,தேவாலா பகுதிகளில் அதிகமாக தென்படத் துவங்கியுள்ளன . தேவாலா கரியசோலை பகுதியில் இன்று உயரமான மரத்தில் அமர்ந்திருந்த " HORN BILL " பறவை நீண்ட நேரமாக சத்தமிட்டது வித்தியாசமான சத்தத்தை கேட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்த்தபோது கருப்பு மஞ்சள் நிறத்தில் மரக்கிளையில் அமர்ந்த "HORN BILL " பறவை அழகாக சத்தமிட்டு தனது ஜோடியை பார்த்தவுடன் மரக்கிளையை துள்ளி குதித்தது இந்த காட்சிகளை அங்கிருந்து சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் மெய் மறந்து ரசித்தனர். அதிகமாக கண்களுக்கு தென்படாத இந்த வகையான " HORN BILL " பறவைகள் தற்போது தேவாலா சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் வர துவங்கியுள்ளன.