திருமருகல் அருகே சென்டிப்பூ சாகுபடியினை தோட்டக்கலை அலுவலர் ஆய்வு

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சென்டிப்பூ சாகுபடியினை தோட்டக்கலை அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-22 15:32 GMT

செண்டிப் பூ விவசாயத்தை ஆய்வு செய்த அதிகாரி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் மாநில தோட்டக்கலைத்துறை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 3 மாத பயிராக சென்டிப்பூ விவசாயம் செய்து வரும் விவசாய நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-விவசாயிகள் டெல்டா பகுதிகளில் நெல்,பயறு, உளுந்து,பருத்தி உள்ளிட்ட பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.இதற்கு மாற்று பயிராக மூன்று மாத கால பயிரான சென்டிப்பூ சாகுபடியினை சோதனை அடிப்படையில் ஒன்றியத்துக்குட்பட்ட 10 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் அளவிற்கு சாகுபடி செய்ய அறிவுறுத்தி தற்போது சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் விவசாயிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 15 கிலோ வரை அறுவடை செய்வதாகவும் பூவின் விலை ரூ.50 வரை கிடைப்பதாகவும், பூ வியாபரிகள் வீட்டிற்க்கே வந்து பூக்களை எடுத்துச் செல்வதாகவும்

இதனால் செலவில்லாமல் லாபம் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் முன்வந்து மாற்று பயிராக தோட்டக்கலை காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கூறினார்.இந்த ஆய்வின் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News