குழந்தைகளுக்கான தங்கும் விடுதி
குமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான தங்கும் விடுதி பணி தொடக்கம். மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.
Update: 2024-01-20 06:16 GMT
குமரி மாவட்டம் குழித்துறை அருகே காரவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஹோம் சிறப்பு பள்ளியின் சார்பில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தங்கும் வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆட்சியர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். ஹோம் சிறப்பு பள்ளி தாளாளர் அருட்பபணியாளர் அஜீஸ் குமார் வரவேற்றார். மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் ஜோஸ் பிரைட், அருள் சகோதரி அனிதா கிறிஸ்டி, வாவறை தூய கார்மல் மலை மாதா ஆலய பங்கு பணியாளர் ஆண்டனி சேவியர், காரவிளை சி எஸ் ஐ போதகர் பிரேம் செல்வசிங், ரட்சண்ய சேனை போதகர் கேப்டன் ராஜகுமார், கரவிளாகம் கிருஷ்ணன் கோவில் தலைவர் முருகன், இன்ஃபெண்ட் நடனப்பள்ளி இயக்குனர் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் டென்னிஸ் நன்றி கூறினார்.