மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - விடுதி காவலருக்கு சிறை தண்டனை !
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விடுதி காவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-21 06:21 GMT
சிறை தண்டனை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் காவலராக பணிபுரிந்து வந்த பொருட்செல்வம் என்பவர் அதே விடுதியில் தங்கி படித்து வந்த ஐந்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரினை தொடர்ந்து அந்த விடுதியின் வார்டன் இந்திரா மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையை சிவகங்கை விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், பொருள்செல்வம் குற்றவாளி என்றும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.