ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

பூந்தமல்லி, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பூந்தமல்லியில் ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-02 14:47 GMT
தற்கொலை

பூந்தமல்லி, ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்தவர் வெற்றியழகன்,54. இவர், பூந்தமல்லி டிரங்க் சாலையில் உணவகம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹோட்டலை மூடினார். இதனால், வெற்றியழகன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற பூந்தமல்லி போலீசார், வெற்றியழகன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News