ஓட்டல் கடை உரிமையாளர் மீது மர்மநபர்கள் தாக்குதல்
மயிலாடுதுறை கழுகாணி முட்டத்தில் ஓட்டல் கடை உரிமையாளர் சிலம்பரசன் கடையை பூட்டி விட்டு வீடு, திரும்பும் போது மர்ம நபர்கள் நான்கு பேர் தாக்கியதில் காயமடைந்தார்.;
Update: 2024-04-22 11:08 GMT
மயிலாடுதுறை கழுகாணி முட்டத்தில் ஓட்டல் கடை உரிமையாளர் சிலம்பரசன் கடையை பூட்டி விட்டு வீடு, திரும்பும் போது மர்ம நபர்கள் நான்கு பேர் தாக்கியதில் காயமடைந்தார்.
மயிலாடுதுறையல அடுத்துள்ள கழுக்காணி முட்டம் பகுதியில் டிபன் கடை நடத்தி வருபவர் சிலம்பரசன். இவர் சம்பவ தினத்தன்று கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது கழுக்காணி முட்டம் அண்ணா சிலை அருகில் நின்று கொண்டிருந்த ஆதேபகுதியை சேர்ந்த ராஜசேகர் ,ஜெயசீலன் ,ராஜமுத்து ,அம்பேத்கர் ஆகிய நான்கு பேர் அன்பரசனை வழிமறித்து திட்டி உருட்டுக் கடையில் அடித்து போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் நான்கு சட்ட பிரிவு வழங்கியில் வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்.