செய்யூர் அருகே புறம்போக்கு இடத்தில் வீடு: அதிகாரிகள் அகற்றம்

செய்யூர் அருகே புறம்போக்கு இடத்தில் கட்டிய வீட்டை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2024-06-16 15:56 GMT

வீட்டை இடித்து அகற்றிய அதிகாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அடுத்த தண்டரை கிராமத்தில், அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, அதே பகுதியை சேர்ந்த மாரி, 45, என்பவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த் துறையினர், அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டக்கூடாது என எச்சரித்தனர்.

அதையும் பொருட்படுத்தாமல், கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்ததால், கட்டுமானப் பணிகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த வீடு அகற்றப்பட்டது.

இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தண்டரை கிராமத்தில், அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில், கடந்த 20 ஆண்டுகளாக, 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு வாயிலாக, 25 குடும்பத்தினருக்கும், அருகே உள்ள பொறஞ்சேரி கிராமத்தில் வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள், புதிதாக வழங்கப்பட்ட இடத்திற்கு செல்லாமல், தொடர்ந்து இப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக கட்டுமானப் பணிகள் நடப்பதாக வந்த தகவலை அடுத்து, நேரில் சென்று எச்சரித்து,

மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தோம். இதையடுத்து, அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் நடக்கும் புதிய கட்டுமானத்தை அகற்ற,

மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News