அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்
சங்கரன்கோவிலில் அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-12 08:41 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர அ.தி.மு.கழகம் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து சங்கரன்கோவில் திருவேங்கடன் சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் அதிமுகமுன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போ போராட்டத்தில்தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தைகட்டுப்படுத்த வேண்டும் என விடியா திமுக அரசை கண்டித்துமனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில்சங்கரன்கோவில் அதிமுக நகரச் செயலாளர் ஆறுமுகம். ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன்உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.