அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

சங்ககிரி: பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

Update: 2024-03-12 09:51 GMT

மனித சங்கிலி போராட்டம்

சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுகசார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு அடைந்துள்ளது. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீர் அழிந்து வருகிறது. போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போதுசேலம் மாவட்ட கட்டுமான தொழிற்சங்க துணைச் செயலாளர் பொன்னையன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News