அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.;
Update: 2024-03-12 09:56 GMT
மனித சங்கிலி போராட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலவலம்பேட்டை , கருங்குழி, மதுராந்தகம் நகரம், அச்சரப்பாக்கம், ஆகிய பகுதிகளில் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.