பாபநாசத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாபநாசத்தில் ஒன்றிய பேரூர் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

Update: 2024-03-13 17:17 GMT

மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாபநாசம் ஒன்றிய பேரூர் அதிமுக சார்பில் பாபநாசம் கடை வீதியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாபநாசம் பேரூர் செயலாளர் கோவி. சின்னையன் தலைமை வைத்தார். பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தியாக பழனிசாமி பாபநாசம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் தஞ்சை மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் துரை சண்முகபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி கலந்துகொண்டு மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சூரிய பிரகாஷ் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முருகதாஸ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கண்ணன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பாபநாசம் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சதீஷ்,  பாபநாசம் நகர தலைவர் அப்துல் காதர், பாபநாசம் ஒன்றிய அவை தலைவர் சபேசன், மாவட்ட பிரதிநிதிகள் ரசீது மணி, பாபநாசம் கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் திலகவதி கணேசன், தொழிற்சங்க தலைவர் பாஸ்கரன் மின்துறை அண்ணா தொழிற்சங்க திட்ட இணைச் செயலாளர் முருகேசன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளும் சார்பு பணி நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்களும் திரளாக மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாபநாசம் பழைய அண்ணா சிலை சாலையில் இருந்து தொடங்கிய மனித சங்கிலியானது, பாபநாசம் பழைய பேருந்து வரை அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News