திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
திருவேங்கடத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் சரியாக செயல்படாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-13 06:20 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு அதிமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் சரியாக செயல்படாத திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சங்கரன்கோவில் நகர் மன்ற துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜு தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் நிர்மலா தேவி. பாலமுருகன், கணேசன், யோவான் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.