பூலாம்பட்டியில் கண்டன கோசங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டம்
பூலாம்பட்டியில் திமுக அரசை கண்டித்து எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் தலைமையில் கண்டன கோசங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுகஅரசை கண்டித்து அதிமுக பிரமுகர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி அவரது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பூலாம்பட்டியில் எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் துறை (எ) மாதேஷ் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல எடப்பாடி நகரத்தில் நகரச் செயலாளர் முருகன் தலைமையிலும் கொங்கணாபுரம் பேருந்து நிலையத்திலும் அதிமுக ஒன்றிய சேர்மன் கரட்டூர் மணி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி நீண்ட வரிசையில் நின்று மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிகளில் பெண்கள் உட்பட அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.