மனித சங்கிலி போராட்டம்

விருதுநகரில் மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் முடங்குவதை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2023-12-27 14:24 GMT

 விருதுநகரில் மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் முடங்குவதை கண்டித்து மனிதசங்கிலிப் போராட்டம் நடந்தது.ம் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் செயலாளர் குருசாமி, பொதுவாக மொத்த வேலைவாய்ப்பில் 65 சதவிதம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகிறது என்றும் இந்நிலையில் இதை நசிவடைய செய்வது போல் மின் கட்டணத்தை மாநில அரசு நிலைக்கட்டணம் என்ற பேரில் 430 சதவிகிதம் உயர்த்தி உள்ளதாகவும், விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.இதில் நேரடியாக 3 லட்சம் பேரும் மறைமுகமாக 3 லட்சம் பேர் என 6 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஏற்கனே கொரோனா காலகட்டத்தில் 10 சதவித தொழில் நிறுவனங்களும்,தற்போது மின்கட்டண உயர்வால் 10 சதவிகித நிறுவனங்களும் நலிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.பீக் ஹவர் கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரைக்கான நெட்ஒர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.மல்டி இயர் டேரிப் ஹெக் முறையை கைவிட வேண்டும். குடிசை தொழில்களுக்கு வழங்கப்பட்ட 3A(1) டேரிப் மறுபடியும் வழங்க வேண்டும்.அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.

Tags:    

Similar News