மனித சங்கிலி போராட்டம்

தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2023-12-28 06:30 GMT

 தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின்சார நிலை கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும் , பிக் ஹவர்ஸ் சார்ஜ்யை ரத்து செய்ய வலியுறுத்தியும் , சோலார் பேனலுக்கு விதிக்கப்படும் கட்டணத்நை முழுமையாக விலக்கு அளிக்க வலியுறுத்தியும் , ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்தப்பட உள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஈரோட்டில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 76 சங்கங்கள் உள்ளடக்கிய சங்கங்கள் சார்பாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது கோரிக்கைகளை வலுயுறுத்தி நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கொங்கு கலையரங்கம் வரை நடைபெற்றது
Tags:    

Similar News