மதுபோதையில் மனைவி தாக்கிய கணவன் கைது
பொள்ளாசி அருகே குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனைமலை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜூமானா ஷிப்ரின்(21).இவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கு முன் ஜமோஷா என்பவருடன் திருமணமான நிலையில் கேன்சர் நோயால் பாதிக்கபட்டிருந்த ஜமோஷா உயிரிழந்ததை தொடர்ந்து இரண்டாவதாக ஆட்டோ ஓட்டுனரான அப்சல்கான் என்பரை திருமணம் செய்து கொண்டார். அப்சல்கானுக்கு குடிபழக்கம் இருந்ததாகவும் வேறு ஒரு பெண்ணுடம் கள்ள தொடர்பு இருத்தாக கூறப்படும் நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி ஜூமானா ஷிப்ரினின் பெற்றோர்கள் மகளை பார்க்க வந்து சென்றுள்ளனர்.இவர்கள் வந்து சென்றதை தன்னிடம் ஏன் கூறவில்லை என கேட்டு மதுபோதையில் இருந்த அப்சல்கான் ஜூமானா ஷிப்ரினுக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதால் ஜூமானா ஷிப்ரின் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார் அப்சல்கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.