காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம்,மணக்கரை பகுதியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-25 01:15 GMT
tRkolai
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மணக்கரை ஆனந்தநம்பி குறிச்சி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சத்ரபதி மகன் இசக்கி முத்து (31). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிருந்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், குடும்பத் தகராறில் பிருந்தா குழந்தையுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த இசக்கிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.