தாய் வீடு சென்றார் மனைவி - விரக்தியில் கணவர் தற்கொலை!

விராலிமலையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியில் கணவர் தற்கொலை.

Update: 2024-03-05 06:18 GMT

மாத்துார் போலீசார்

விராலிமலை ஒன்றியம் மாத்துார் அண்ணாநகரை சேர்ந்தவர் சாமி(40). லாரி டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத் தன்றும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.மகள் 12ம் வகுப்பு தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த நிலையில் கணவர் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த மனைவி மைதிலி கோபித்துக்கொண்டு பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த சாமி நேற்று முன்தினம் இரவு மனைவியை போனில் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு வராவிட்டால் தற் கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். சிறிது நேரம் கழித்து மைதிலி கணவரை தொடர்பு கொண் டபோது போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்குமாட்டிய நிலையில் சாமி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News