மனைவி மாயம் கணவர் புகார்
கள்ளகுறிச்சி மாவட்டம், திம்மாபுரத்தில் மனைவியை காணவில்லை என கணவன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.;
Update: 2024-04-17 05:18 GMT
மனைவி மாயம்
சின்னசேலம் அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கஸ்துாரி, 24; கடந்த 10ம் தேதி காட்டனந்தலில் உள்ள தாய் வீட்டிலிருந்து வெளியே சென்ற கஸ்துாரி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து கஸ்துாரியை தேடி வருகின்றனர்.