ஆற்றில் மூழ்கி கணவர் பலி: மனைவி கண் எதிரில் பரிதாபம்!
ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி மனைவி கண் எதிரே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். ;
Update: 2024-02-05 10:54 GMT
உயிரிழப்பு
தூத்துக்குடி மேற்கு மில்லர்புரம் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்த ராஜாசிங் மகன் கனகவேல் (43). தொழிலாளி. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏரல் தாமிரபரணி் ஆற்றில் குளிக்க வந்தார். அனைவரும் ஆற்றுப்பாலத்திற்கு மேற்புறம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்று தண்ணீரில் அவர் மூழ்கியுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி கூச்சல் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் தண்ணீரில் மூழ்கி அவர் இறந்து போனார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.