கணவர் மாயம் - மனைவி காவல் நிலையத்தில் புகார் !
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்ய வந்த கணவர் திடீரென மாயமானர். மனைவி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-04-27 07:03 GMT
காணவில்லை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் ஜே. ஜே. காலனியைச் சேர்ந்தவர் 34 வயதான அருண்குமார். இவரது மனைவி 32 வயதான துர்கா. அருண்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 16 ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வந்த அருண்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார். அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அருண்குமார் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான அருண்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.