திசையன்விளையில் கணவன் மனைவி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-15 05:56 GMT
தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த புனிதா, பிரபாகரன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் புனிதா நேற்று (மே 14) இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் பிரபாகர் மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.