நீரின் தரம் குறித்த 4 மாத சான்றிதழ் படிப்பை இணைய வழி மூலம் வழங்குகிறது சென்னை ஐ.ஐ.டி நிறுவனம்!!
நீரின் தரம் குறித்த 4 மாத சான்றிதழ் படிப்பை இணையம் மூலம் வழங்க இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2024-07-09 06:35 GMT

Investors Summit at IIT Chennai
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் கோவை கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து நீரின் தரம் குறித்த 4 மாத சான்றிதழ் படிப்பை இணையம் மூலம் வழங்க இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள், நீர் தரம் தொடர்பான தொழில்நுட்பப் பின்னணி உடையவர்கள் இதில் சேரலாம் என்றும் நீரின் தரம், மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் ஆகியவை குறித்த படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 20-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.