சட்டவிரோத மது விற்பனை - 43 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 586 மதுபாட்டில்கள், மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூபாய் 14,820/-ம் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.