சட்டவிரோத மது விற்பனை - இருவர் கைது
சட்டவிரோத மது விற்பனை. இருவர் கைது. 23 மதுபாட்டில் பறிமுதல்.
Update: 2024-04-03 11:45 GMT
கரூர் மாவட்டம், மாயனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திலக் ஏப்ரல் இரண்டாம் தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை மணவாசி மற்றும் மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, மேட்டு திருக்காம்புலியூர் அரிஜன தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணன் வயது 51 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல மணவாசி, தெற்கு தெருவில் மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் வயது 35 என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 23 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.