சட்டவிரோத மது விற்பனை - பாரை இழுத்து மூடிய எஸ்பி
நாகப்பட்டினம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பாரை மூடி எஸ்பி ஹர்ஷ் சிங் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டால் பார் உரிமத்தை ரத்து செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Update: 2024-02-01 04:24 GMT
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மாவட்ட எஸ்பி நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் சென்றிருந்தார். அப்பொழுது பிரதாபராமபுரம் பகுதியில் கிழக்குபுறத்து வாசல் பகுதியில் செயல்பட்டுவரும் பாரில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக உங்கள் SP-யிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங் உடனடியாக சம்பவயிடத்திற்கு நேரடியாக சென்று சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும், பாரில் அரசு அனுமதியின்றி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்ய உத்தரவு பிறபித்தத்துடன், தற்காலிகமாக பார் செயல்பட அனுமதி மறுத்து பாரை இழுத்து முட அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இது போன்ற சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டால் பார் உரிமம் இரத்து செய்து நிரந்தரமாக முடப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும், இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் SP-யிடம் பேசுங்கள் 8428103090 தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.