கரூரில் சட்டவிரோத மது விற்பனை

கரூரில்,சட்டவிரோத மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வந்த காவலர்கள் காத்திருநதிருந்தனர்.

Update: 2024-01-16 14:07 GMT

ஆய்வு செய்யும் போலீசார்

இன்று "திருவள்ளுவர் தினம்" என்பதால் தமிழக அரசு இன்று மது விற்பனைக்கும், பாருக்கும் தடை விதித்து, எச்சரிக்கை செய்தது. மீறி விற்பனை செய்பவர் அல்லது பார் திறந்து வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலைய முகப்பில் தமிழக அரசின் டாஸ்மார்க் நிறுவனம் செயல்படுகிறது. இதன் அருகிலேயே அனுமதி பெற்ற பாரும் செயல்படுகிறது. அரசின் விதிமுறைப்படி டாஸ்மார்க் கடை மூடப்பட்டுள்ளது. அருகில் உள்ள பார் இன்று சட்டவிரோதமாக செயல்பட்டது.

இதை அறிந்து செய்தியாளர்கள் படம்பிடிக்க சென்றபோது மது பிரியர்கள் அங்கிருந்து, முகத்தை மூடிக்கொண்டு தலைதெறிக்க ஓடினர். பார் உரிமையாளர் பாரின் சட்டரை இழுத்து மூடினார். இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு நடவடிக்கை எடுக்க வந்த காவல்துறையினர்,

கதவை திறக்க பலமுறை வலியுறுத்தியும், பார் உரிமையாளர்கள் அங்கு பணி செய்யும் தொழிலாளர்கள் கதவை திறக்க மறுத்தனர். இதனால் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தும் கதவை திறக்காதால், காவலர்கள் மீண்டும் காவல் நிலையத்திற்கு திரும்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News