சட்டவிரோத மது விற்பனை - இரண்டு பெண்கள் கைது !

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது. 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-04-08 11:19 GMT

மது விற்பனை

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது. 22 மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மார்ச் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 12:00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மேட்டு மகாதானபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது, மேட்டு மகாதானபுரம் பகுதியில், சங்கர் மனைவி அன்னக்கிளி வயது 55 என்பவரும், சண்முகம் மனைவி நதியா வயது 55 என்பவரும் அவரவர் வீட்டிற்கு அருகாமையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், இருவரது வீட்டிலும் நடத்திய சோதனை அடிப்படையில், விற்பனைக்கு வைத்திருந்த மொத்தம் 22 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News