சட்டவிரோத மதுவிற்பனைச் செய்தவர் கைது
திருவாரூர் மாவட்டம்,கிளியனூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-03-18 06:06 GMT
பதுக்கி வைத்திருந்த மது
பேரளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிரடி மதுவிலக்கு வேட்டை நடத்தினர். அப்போது கிளியனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவரின் மகன் விஜயகுமார் என்பவர் வீட்டில் நடத்தி அதிரடி சோதனையில் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 பாண்டிச்சேரி சாராயப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.