சட்டவிரோதமாக மது விற்றவர் கைது - மது பாட்டில்கள் பறிமுதல்.

அருமனை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-23 04:53 GMT

காவல் நிலையம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு மது விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தனிப்படை அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்த நிலையில் அருமனை அருகே உள்ள தனியார் பார் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் அதிர டியாக சோதனை நடத் தினார். அப்போது குளத்தெருவில் சட்ட விரோதமாக ஜஸ்டின் ஜேம்ஸ் ராஜ் என்பவர் மது விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 180 எம்எல் 7 மது பாட்டில்களை ,போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News