சட்டவிரோத மது கடத்தல்
புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானம் கடத்தி வந்தவரை விழுப்புரம் மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு ஆய்வாளர் மீனா மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா மற்றும் காவலர் தலைமையில் விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி பெரிய காலனி அம்பேத்கர் சிலை அருகே வாகன தணிக்கில் ஈடுபட்டபொழுது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் ஏராளமான உயர்ரக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் காரில் இருந்த வானூர் வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை, பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் சுமார் 3000 பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் மேற்பட்ட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். பின்னர் அவரை நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தி மது பாட்டில்கள் மற்றும் காரை மதுவிலக்கு போலீசார்கள் பறிமுதல் செய்தனர்.