சட்டவிரோத லாட்டரி விற்பனை: வாலிபர் கைது

அரவக்குறிச்சி அருகே சட்டவிரிதமாக லாட்டரி விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-28 15:08 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 27 ஆம் தேதி மாலை 5 மணி அளவில், சீத்தப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, மலைக்கோவிலூர் அருகே உள்ள லிங்கத்து பாறை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜய் வயது 36 என்பவர் கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், விஜய் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 120 மதிப்புள்ள நான்கு கள்ள லாட்டரி டிக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News